நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், மெழுகுவர்த்திகளை ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இத்தாக்குதலை கண்டிக்கும் பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இத்தாக்குதலினால் தமது சமூகம் அதிர்ந்து போயுள்ளதே தவிர, உடைந்து போகவில்லை என இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ரொறன்ரோ முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே உள்ள மிகப்பெரிய மசூதி மற்றும் லைன்வுட் மஸ்ஜித் மசூதி ஆகிய இரு மசூதி நால்வர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், இதுவரை 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இச்சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவும் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
