மும்பையில் உள்ள ஏயார் இந்தியா விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்தே குறித்த விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் விமான நிலையத்திற்கு கொமாண்டோ படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பயணிகள் நுழையும் பகுதியில் மோப்ப நாய்கள் நிறுத்தப்பட்டு பயணப்பொதிகள் தீவிரமாகச் சோதனை செய்யப்படுகிறது.
இதேபோல் வாகனங்கள் நிறுத்தும் பகுதியிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் குறித்த மிரட்டலையடுத்து வட.கிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் மிகவும் முக்கியமான விமான நிலையங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆளில்லா விமானம் மூலமும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை சந்தேகிக்கப்பதால், வான்பரப்புக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
