அவ்வகையில் மதச் சார்பின்மை கட்சியை ஆதரிப்போமென கூறும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதம் சார்ந்து செயற்படும் கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்துள்ளாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கம்யூனிஸ்டுகளுடன் கைகுலுக்கிவிட்டு அடுத்த நாள் கொலைகார கம்யூனிஸ்டுகள் என்று உரையாற்றுகிறார்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இலங்கை தமிழின படுகொலைக்கு துணை நின்ற ராகுலை வரவேற்றுவிட்டு, அடுத்தநாள் இலங்கை தமிழினப் படுகொலையைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இவ்வாறு தங்களது தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி நிறம்மாறும் பச்சோந்தியைப் போன்று செயற்படுகின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
