LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

மனித உரிமை பேரவையுடன் இணைந்து இலங்கை செயற்பட வேண்டும் என வலியுறுத்தல்!

காலதாமதம் ஏற்படாத வகையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான செயற்பாடுகளின் முக்கியமானதொரு படிமுறையாக 40(1) தீர்மானத்தைக் கருதமுடியும்.

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகளை குறித்த காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7