ஒட்டாவாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயேஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 47 மற்றும் 22 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





