புத்தளம், அநுராதபுரம், கிரிதலை ஆகிய பகுதிக்குச் சென்ற இந்த பவனி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்பைச் சென்றடைந்துள்ளது.
மட்டக்களப்பிற்கு வந்தவர்களை தேவைநாடும் மகளிர் அமைப்பின் தலைவி திருமதி சந்திரா தியாகராஜா, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் துவிச்சக்கர வண்டி பவனியில் பயணித்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அஸீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை இந்த துவிச்சக்கர வண்டி பவனியை ஆரம்பித்திருந்தனர்.
இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் என பலர் பங்குகொண்டனர்.
வீட்டு வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் தேவைநாடும் மகளிர் அமைப்பு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
