செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையிலே செயற்கை மழையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.
இதற்காக தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





