பிரமேலா வீதி வில்லியம்ஸ் மற்றும் பார்க்வே பகுதியில், மிலாகாடு கிறிஸ்செண்ட் குடியிருப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றது.
வீடுகளுக்கு வெளியே இடம்பெற்றதாக கூறப்படும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஆண் ஒருவர் உயிராபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
