
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமரிடம் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. எனவே, அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அபிநந்தனை விடுவிப்பதற்காக இந்தியா இராஜதந்திர ரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
