இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விசேட துறையில் சிறப்பு பட்டம் பெற்ற கலாநிதி. அஸீஸ், வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர், கியோட்டா தோசிசா பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுக்கொள்கையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.
ஜப்பானில் சிறிது காலம் வருகை விரிவுரையாளராக பணியாற்றிய இவர், பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தில் விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றார்.
அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா தலைமையேற்று வழி வழிநடத்திவரும் இன நல்லுறவு மற்றும் சமாதான கற்கை நெறியின் இணைப்பாளராகவும் இவர் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.






