ரோயல் கனடியன் விமானப்படையைச் சேர்ந்த மேஜர் ஒருவருக்கே இவ்வாறு மின்னஞ்சல் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடத்தின் நிர்வாகத்தினராலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தம்மை வருத்தமடையச் செய்துள்ளதாக விமானப்படை மேஜர் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடி எவருக்கும் தொந்தரவாக அமைந்திருக்காது என நம்புவதாகவும், ஆனால், யாரோ ஒருவரது முறைப்பாட்டிற்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டார்.
மேலும், ஒரு கனடியராக இருப்பதில் தான் பெருமையடையும் அதேவேளை, யாருடைய முறைபாடுமின்றி தேசியக் கொடியை பறக்கவிட அனுமதியளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
