வவுனியா, புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை அகற்றமுடியாமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மதுபான நிலையத்தை அகற்றவேண்டும் என இந்த சபையிலே நாங்கள் எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியாததை எண்ணி கவலையடைகின்றேன்.
நாங்கள் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாதுவிடின் நாம் இங்கு இருப்பதில் பலன் இல்லை. எனவே இதற்கு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனுமதிப் பத்திரங்கள் இல்லாத மக்கள் நலன்சார்ந்த வியாபார நிலையங்களை விலக்களித்துவிட்டு, மக்களிற்குப் பாதகமான இவ்வாறான மதுபான நிலையங்களிற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கமுடியும் என நகரசபைத் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எமது சபையினால் எடுக்கப்பட்ட குறித்த மதுபான நிலையத்தினை அகற்றுவது தொடர்பான தீர்மானத்தை மதுவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்” என நகரசபைச் செயலாளர் இ. பரதலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






