
கனேடிய வலது சாரி இணையதளம் ஒன்றே இவ்வாறு குறித்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகளை ஹமில்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட இனத்தாருக்கு எதிராக மனதார வெறுப்பைத் தூண்டுவது கனேடிய சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
எனவே இணையத்தளத்தின் உரிமையாளருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
