LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 27, 2019

அதிகாரங்களை மத்திக்கு தாரைவார்ப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் தவராசா வேண்டுகோள்

அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரிடம், வட. மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கிலுள்ள பாடசாலைகளை தரமுயர்த்தும் நோக்குடன் அதன் அதிகாரங்களை மத்திய அரசிடம் கையளிக்கும் விடயம் குறித்தே அந்த கடிதத்தில் கோரிக்கையை விடுத்துள்ளார்.

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தாங்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளின் அடிப்படையிலும் வடக்கின் 14 பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்குவதற்கு முயற்சித்து வருகின்றீர்கள் என அறிகின்றேன். இப்பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்குவது என்பது வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் கொண்டுவருவதற்கான ஓர் முயற்சியாகும்.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணத்திற்கான அதிகாரப் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, தேசியப் பாடசாலைகள் என்றால் என்ன என்பதற்கு ஒரு விதமான வரைவிலக்கணமும் கொடுக்கப்படவில்லை.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள இந்த குறைபாட்டினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் பல பாடசாலைளைத் தான்தோன்றித்தனமாகப் தேசிய பாடசாலைகள் ஆக்கியுள்ளனர். இக்குறைபாடு அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான சகல மட்டத்திலான கலந்துரையாடல்களிலும் சுட்டிக்காட்டப்பட்டதன் விளைவாக அண்மைக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதனைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து இலங்கையில் கூடிய அதிகாரப் பகிர்வுடனான அரசியலமப்பு அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறாக மாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டிய வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இச்சூழலில் மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான செயற்பாட்டின மூலம் மத்தியினுடைய நிதிப் பங்கீட்டில் மேலும் கூடிய நிதியினை இப் பாடசாலைகளிற்கு பெற்றுக் கொள்ளலாம் என்பது தங்கள் குறிக்கோளாக இருக்குமாயின் கல்வி அமைச்சின் ஊடாக நேரடியாகத் தங்களால் தெரிவு செய்யப்படும் பாடசாலைகளுக்கு அந்த நிதியினை வழங்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்யமுடியும். ஆதலினால் மேற்படி தங்கள் முயற்சியினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7