நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு 7:30 மணியளவில் ஸ்கேட்டிங் அவென்யூ மற்றும் இளவரசி வீதியிலிருந்து குறித்த குழந்தையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, ரொறன்ரோ பொலிஸார் இந்த குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிப்பதற்கான இத்தகவலை, உடனடியாக டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.
இதில், குறித்த குழந்தை தொடர்பில் உடனடியாக தகவல் தெரிந்தவர் உடனடியாக தொடபுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையின் பெற்றோர்கள் குறித்த குழந்தையினை பெற்று கொண்டனர்.