கப்பட்ட இராணுவ உதவி, நிறுத்தப்படுவதால் அங்கு மேற்கொள்ளப்படும் உயிர்காப்பு மருத்துவ வெளியேற்ற நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலிக்கு, ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு நடவடிக்கை ஊடாக கனடாவால் வழங்கப்பட்ட இராணுவ உதவி, எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.
இதனால், அங்குள்ள கனேடிய படைகளை வெளியேற்றவுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இதுவரை கனடாவின் இராணுவ படையால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளை வேறு நாட்டு படையினரை வைத்து ஈடுசெய்யும் வரையிலும் கனடாவை தொடர்ந்து உதவுமாறும் ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் அதற்கு கனடா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாலிக்கு சென்றுள்ள 250 கனேடிய இராணுவ வீரர்களும், எட்டு கனேடிய உலங்குவானூர்திகளும் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் தமது நடவடிககைகளை மாலியில் முடிவுறுத்திக் கொள்ளவுள்ளது.
அதற்குள் அங்கு வந்து சேரவேண்டிய ரோமானிய படைகள் ஒக்டோபர் மாத நடுப்பகுதி வரையில் காலதாமதமாவதால், அங்கு ஏற்படவுள்ள வெற்றிடத்தினை நிரப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது