LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 14, 2019

ஜெனீவா பிரேரணையில் இராணுவத்தினரை அவர்களது நாட்டில் கைது செய்வது குறித்த அத்தியாயம் உள்ளது!

ஜெனீவாவில் பிரித்தானியா புதிதாகக் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவத்தினரை அவர்களது நாட்டில் கைது செய்வது குறித்த அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

வியத்மக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் இந்த அத்தியாயம் மிகவும் ஆபத்தானதாகும். அதேபோல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கவலை வெளியிடுகின்றார்.

இவையனைத்தும் நமது உள்ளக விவகாரங்கள் எந்தளவு தூரத்திற்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றது என பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத்தொடரில் எதிர்வரும் வாரமளவில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இருவேறான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவுள்ளனர்.

இது சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7