கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல இழுபறி நிலைகளுக்கு மத்தியில் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதியளவில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ள அதேவேளை, சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு.ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
குறித்த திரைப்படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவிவந்த நிலையில் தற்போது வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                 

 



