ஐ.எஸ் வசமிருந்த சிரியாவின் பகுதிகள் முற்றுமுழுதாக விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதே அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப்பினால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போர் முடிவடைந்துள்ள நிலையில் போராளிகள் வசமிருந்த அனைத்து பகுதிகளும் மீளப்பெறப்பட்டுள்ளதென ஜனாதிபதியினாலும் வெள்ளைமாளிகையினாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் வசமிருந்த கடைசிப்பகுதியான பாக்ஹுஸ்ஸில் கடந்த சில தினங்களாக ஐ.எஸ் மற்றும் சிரிய அமெரிக்க ஆதரவு படைகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பாக்ஹுஸ் பகுதி சிரியாவின் யுத்த வெற்றி பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மீதமுள்ள ஐஸ் போராளிகள் சரணடையும் பொருட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக சிரிய இராணுவம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது





