கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்கட்சியின் நாடானுமன்ற உறுப்பினர் கனகஹேரத் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காலம் கடந்த பின்னரே மாகாணசபை தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கருத்துரைக்கின்றார்கள்.
அரசாங்கத்தை வீழ்த்தி தேர்தலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் பலமுறை கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் ஐக்கிய தேசிய கட்சியினை பாதுகாத்தனர்.
அத்துடன் கூட்டமைப்பினர் மக்களின் அடிப்படை தேர்தல் உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு குறிப்பிடவில்லை.
மாறாக இராணுவத்தினருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தில் மாத்திரம் உறுதியாக உள்ளார்கள். தற்போது பலவீனமாக ஒரு அரசாங்கம் ஒன்று செயற்படுவதற்கு கூட்டமைப்பினரே பொறுப்புகூற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
