உள்ளூர் தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற உக்ரைன் போட்டியாளர் யூரோவிஷன் பாடல் போட்டியில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
27 வயதான மரூவ் என்று அழைக்கப்படும் அனா கோர்சுன், இஸ்ரேலில் நடைபெறும் போட்டியில் பாடுவதற்காக கடந்த 23 ஆம் திகதி பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ரஷ்யாவில் கச்சேரிகளை நடத்துவதற்கு தடை உட்பட மாநில ஒளிபரப்பாளர்கள் தன்மீது ஒப்பந்த கடமைகளை சுமத்த முயல்வதாக அனா கோர்சுன் தெரிவிக்கிறார்.
கிவ் அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சாரகராக மாநில ஒளிபரப்பாளர்கள் மாறியிருப்பதாகவும் அனா கோர்சுன் குற்றம் சுமத்துகிறார்.
ரஷ்யாவும் உக்ரனும் கலாச்சார ரீதியாக நெருக்கமாக உள்ளன. ஆனால், 2014 ல் கிரைமியாவை மொஸ்கோ கைப்பற்றியதில் இருந்து நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவுகள் நெருக்கடிக்குள்ளாகிவிட்டன.
கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாத கிளர்ச்சியில் 13,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். Maruv உக்ரைன் தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை.
இந்நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட பங்கேற்பாளர்களும் தங்கள் இறுக்கமான கால அட்டவணையை மேற்கோள்காட்டி, மரூவுக்கு பதிலாக இஸ்ரேல் செல்லும் திட்டத்தை நிராகரித்துள்ளனர்.
2004 மற்றும் 2016 ஆண்டுகளில் யூரோவிசன் பாடல் போட்டியை உக்ரேனிய பாடகர்கள் வென்றனர்.
2017 ஆம் ஆண்டில் யூகோவிஷன் போட்டி உக்ரேனால் நடத்தப்பட்டது. அந்த போட்டி பெரும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
