தற்போது 27 வயதாகும் ரித்ஜிக் வடகிழக்கு சிரியாவில் உள்ள குர்திஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் தாய்நாட்டுக்கு செல்லும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அவர் நெதர்லாந்திற்கு திரும்பினால் ஒரு பயங்கரவாத அமைப்பில் இணைந்தமைக்காக ஆறு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஐ.எஸ் அமைப்புக்காக போராட நிர்பந்திக்க பட்டதாக தெரிவிக்கும் ரித்ஜிக், தாம் ஐஸ் என்பதை நிராகரிப்பதாகவும் இந்த அமைப்பில் இருந்து வெளியேற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரித்ஜிக், சிரிய பெண்ணான ஷமீமா பேகத்தை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
