அந்தவகையில், அரசியல் தலைவர்கள் இந்திய விமானி அபிநந்தனுடன் எடுத்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
தேர்தல் நடத்தைகள் அமுலில் உள்ளதால், இந்த ஒளிப்படங்கள் மூலம் அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடலாம் என கருதி, முகலூலில் அபிநந்தன் அரசியல் தலைவர்களுடன் காணப்படும் ஒளிப்படங்களை அகற்ற அந்நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று பேருந்து தரிப்பிடங்களில் காணப்படும் அரசியல் தலைவர்களின் சிலைகள் அருகே அக்கட்சியின் கொடிகம்பங்களில் பறக்கும் கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 19ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






