சிவசேனா கட்சியின் உத்தியோகப்பூர்வ நாளிதழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார்களென பரவலாக பேசப்பட்டது.
ஆனால் குறித்த இருவரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இக்கருத்து அவர்களின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது. அதுமாத்திரமின்றி இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகியுள்ளது என சிவசேனா குறிப்பிட்டுள்ளது.






