இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
குற்றங்களை மூடி மறைத்து நல்லிணக்கத்தை எட்ட முடியாது. சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும்.
மக்கள் விரும்பும் அரசாங்கமொன்று அமைய வேண்டுமானால் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் வகுப்பறைகளை கிராமப்புற பாடசாலைகளிலும் அமைப்பதன் மூலம் அந்த மாணவர்கள் இலகுவாக தமது கணினி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்“ என குறிப்பிட்டார்.
