
ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகரிக்கும் அமைப்பு (ETIAS) என்று அழைக்கப்படும் அந்த புதிய திட்டத்தின்படி, கனேடியர்கள் இணையத்தில் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும், கட்டணம் ஒன்றைச் செலுத்திவிட்டு அது அங்கீகரிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத புலம்பெயர்தலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், எல்லையை பாதுகாப்பதற்காகவும், கனேடியர்கள் உட்பட சர்வதேச பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் பிரித்தானியாவும் ரஷ்யாவும் இடம்பெறவில்லை. தற்போதைக்கு கனேடியர்கள் சுற்றுலாவுக்காக சென்று குறுகிய காலம் தங்கும்பட்சத்தில் அவர்களுக்கு விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
