LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 19, 2019

கல்விக் கட்டமைப்பை அரசியல் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் – கல்வி அமைச்சர்

கல்விக் கட்டமைப்பை அரசியல் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வித் துறையின் அனைத்து பதவிகளும் தகைமை உடையோருக்கு வழங்குவதே தனது கொள்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிரிஉல்ல ரத்னாலங்கார மஹா வித்தியாலயத்தின் ஆய்வு கூடம் மற்றும் ஆரம்ப கல்வி கற்றல் வள நிலையம் ஆகியவற்றை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு பேசுகையில், “கல்விக் கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும். கல்வித் துறையின் அனைத்து பதவிகளும் தகைமை உடையோருக்கு வழங்குவதே எனது கொள்கை.

கடந்த நான்கு வருடங்களில் தகைமையற்ற ஆசிரியர்கள் எவரையும் கல்விக் கட்டமைப்பில் இணைக்கவில்லை. கல்வியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வீதத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்காக விடுதிகளுக்கான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் திட்டத்தின் கீழ் 5000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாடசாலைகளுக்கு 3500 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பத்திரத்தை அமைச்சரவைக்கு முன்வைத்துளளேன்.

மேலும் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கணிணி இவ்வருடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் தர மாணவர்களுக்கும் கணிணியைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும்.

அதிபர்களுக்கான பயிற்சி மற்றும் தரமான அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதிபர்கள் 1000 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7