டிஸ்னி தயாரித்துள்ள புதிய ‘அலாவுதீன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.அந்தவகையில், Disney’s ‘Aladdin’ திரைப்படத்தில் பிரமிக்க வைக்கும் அனிமேஷன் காட்சிகள் மறைந்த ரொபின் மெக்லாரின் வில்லியம்ஸ்சின் (Robin McLaurin Williams) கற்பனையான, மாய விளக்கில் இருந்து வெளியே வந்த பூதத்திற்கு அபாரமான திரைவடிவம் அளித்துள்ளது.
இத்திரைப்படத்தில் மேனா மசூத் அலாவுதீனாகவும் இளவரசி ஜஸ்மினாக நவோமி ஸ்காட்டும் நடித்துள்ளனர். இரண்டு பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி திரைக்கு வருகின்றது.





