டஃப்பரின் வீதிக்கு மேற்கே, ஃபின்ச் அவென்யூவில் அமைந்துள்ள குறித்த அந்த நிகழ்வு மண்டபத்தில் நேற்று அதிகாலை 1.20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது குறைந்தது 3 பேர் கத்திக் குத்துக்கு இலக்கானதையும், இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையும் ரொறன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
