அரச நிதி கட்டுப்பாட்டாளரும், ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் நெருங்கிய நண்பருமான எல்விஸ் அமரோசோ நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரின் தனிப்பட்ட நிதி அறிக்கைகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சட்டமன்றத் தலைவராக விளங்கும் கய்டோ, தனது பதவிக்கால நிறைவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் இத்தடை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்து தீர்மானிக்க அமரோசோ கணக்காய்வாரள் நாயகம் அல்ல எனத் தெரிவித்து இவ்வறிவிப்பை கய்டோ நிராகரித்துள்ளார்.
சட்டபூர்வமான காங்கிரஸிற்கே கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கான அங்கீகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மதுரோவை பதவி நீக்குவதற்கான தமது பிரசாரம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






