இதனை எத்தியோப்பிய எயர்லைன்ஸ் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
இதேவேளை, போயிங் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு பாதுகாப்பானது என்பது உறுதிபடுத்தப்படும்வரை விமானச் சேவைகளை இடைநிறுத்துவதாகவும் எத்தியோப்பிய எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
பேரழிவை ஏற்படுத்திய விமான விபத்தையடுத்து பல உலக நாடுகள் போயிங் விமான சேவைகளை இடைநிறுத்தின. நோர்வே விமான நிறுவனமும் விமான சேவைகளை இடைநிறுத்திய நிலையில், அதற்கான இழப்பீட்டை வழங்குமாறு நோர்வே கோரியுள்ளது.
அதன்படி, சர்வதேச ரீதியில் செயற்பட்டுவந்த போயிங் 737 மக்ஸ் ரக விமானங்களின் மூன்றில் இரண்டு விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், போயிங் பங்குகள் நேற்று 6.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், விபத்தையடுத்து போயிங் 11.15 வீத நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எத்தியோப்பிய விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.






