அவருடன் மேலும் பல நிறைவேற்றுத் தர அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) மாலை இராஜிநாமா செய்துள்ளனர்.
தலைமைப் பதவிக்கு Eduardo Bartolomeoவை நியமித்துள்ளதாக Vale நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் குறித்த சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான அணை, கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி உடைப்பெடுத்தது. தென்கிழக்கு பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 186 பேர் உயிரிழந்ததோடு, ஒரு மாதம் கடந்தும் இன்னும் 122 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து Vale நிறுவனம் கடும் விசமர்சனங்களுக்கு உள்ளாகியதோடு, சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இவர்களுக்கான பணிநீக்கத்தை கடந்த வெள்ளிக்கிழமை வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து Valeஇன் தலைவர் Fabio Schvartsman மற்றும் நிறைவேற்று தரத்தில் உள்ள பல அதிகாரிகள் தமது பணியை இராஜிநாமா செய்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் அப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சுரங்க நிறுவன பணியாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் ஆமை வேகத்தில் நகர்வதாக பிரேசில் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அத்தோடு, விபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
