அபுதாபியில் நடைபெற்ற விசேட தேவையுடையவர்களுக்கான கோடைகால ஒலிம்பிக்கில், 27 பதக்கம் வென்ற தாயகம் திரும்பிய நால்வர் எட்மன்டன் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
குறித்த போட்டியில், 190 உலக நாடுகளிலிருந்து சுமார் 7,000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கனடாவிலிருந்து கலந்த கொண்ட போட்டியாளர்கள் மொத்தம் 155-பதக்கங்களை வென்றனர். இதில், 90-தங்கம், மற்றும் 37-சில்வர் மற்றும் 28 வெண்கல பதக்கங்கள் அடங்குகின்றன.
இந்தநிலையிலேயே எட்மன்டன் பகுதியை சேர்ந்த நால்வர் எட்மன்டன் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
இவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





