LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

தவக்கால சிந்தனைகள்-9

9. “ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்! பாவங்களை மன்னிப்பவர். துன்ப வேளைகளில் காப்பாற்றுகிறவர்.
கோழை நெஞ்சத்தவருக்கும், ஆற்றலற்ற கையருக்கும், இரட்டை வேடமிடும் பாவியர்க்கும் ஐயோ கேடு வரும்!
உறுதியற்ற உள்ளத்தினருக்கும் ஐயோ கேடு வரும்!  ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை! எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.’

ஆண்டவரிடம் கொள்ளும் பற்றுறுதி நமக்கெல்லாம் காப்புறுதி போலானது. எந்த ஆபத்து நடந்தாலும் அது நம்மைக் காப்பாற்றும், நமக்கேற்படும் பிரச்சினைகளிலிருந்து பாதிப்பில்லாமல் வெளியே வர துணை செய்யும். எனவே இறைவன் மீது நம்பிக்கை கொள்வது நம்மைப் பலப்படுத்திக் கொள்ள அதி சிறந்த வழியாக இறைவனாலேயே நமக்கு அருளப்படுகின்றது.

நான்காம் நிலை
இயேசு தன் தாயாரைச் சந்திக்கின்றார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“ஆண்டவரே உம் இல்லத்தில் தங்கி வாழ்வோன் யார்? உமது திருமலையில் குடியிருப்பவன் யார்?
“மாசற்ற வாழ்க்கை நடத்துபவன், நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், இதயத்தில் நேரியவை நினைப்பவன்!
“நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன், அயலவனுக்குத் தீமை செய்யாதவன் ; பிறரைப் பழித்துரைக்காதவன்;
“தீயோரை இழிவாகக் கருதுபவன், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்;,
“தனக்குத் துன்பம் வந்தாலும், தந்த வாக்குறுதியை மீறாதவன், தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்காதவன், மாசற்றோருக்கெதிராக கைக்கூலி வாங்காதவன், இங்ஙனம் நடப்பவன் என்றும் நிலைத்திருப்பான்.”
(சங். 14 : 1 – 5)
ஆண்டவர் இயேசுவின் இல்லத்திலும், அவர்தம் உள்ளத்திலும் தங்கியிருக்கும் அன்னையவள் தன் வாழ்வில் கறையேதும் காணாதவள், பிறர் குறையேதும் சொல்ல இடம் வைக்காதவள் துன்புறுகிறாள்!
துன்புறும் அன்னையைக் காண இயேசு அதிகம் வருந்துகிறார். அதிலும் ஆளுக்கு ஆள் ஆறுதல்!
காய்த்த மரமே கல்லெறிக்கும், பொல்லெறிக்கும் ஆளாகும். அதனால் காய்க்கின்ற மரமெல்லாம் இந்த அவதிக்கு ஆளாகின்றன என்றும் இல்லை.
நற்கனி தரும் மரம் படும் வேதனை நச்சுக் கனி தரும் மரத்திற்கு வருவதில்லை.
நீதிக்காக – நியாயத்திற்காக – உண்மைக்காக குரல் கொடுப்பவன் குரல்வளையே நசுக்கப்படுவதுண்டு.
பிறர் துன்பத்தில் ஆறுதலாய் இருக்க அவர் சுமைகளைக் குறைப்பதைவிட வேறு மார்க்கம் நமக்கு உண்டா?
சிந்திப்போம்:
நன்மை செய்து வாழவும், நீதிக்கு என்றும் துணை போகவும் எனக்கு மனமும், வாய்ப்பும் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
நாவால் தீமை புரியாமலும், பிறரைப் பழித்தொதுக்காமல் போற்றி வாழவும் என்னில் பண்பு வைத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி!
துன்புறும் அயலவன் மனக்குறையை ஆறுதலாகக் கேட்கப் பொறுமையைத் தந்த இறiவா உமக்கு நன்றி!
சொன்ன சொல் தவறாமல வாழவேண்டும் என்ற வேகத்தை என்னில் வைத்த இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7