LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 1, 2019

இந்திய அதிகாரிகளிடம் இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார் அபினந்தன்

பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எல்லையை வந்தடைந்த விமானியை இந்திய விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகளான பிரபாகரன் மற்றும் ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7