LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

கானாவில் விபத்து – 60 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கானாவின் தெற்கு பகுதியில் அண்மையில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது.

இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக கிழக்கு போனோ பொலிஸ் உயரதிகாரி ஜோசப் அன்ட்வி கியாவு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7