LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 3, 2019

காஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் சூரின்சார் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிப் பயணித்த பேருந்தே நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) – காஷ்மீர் பள்ளத்தாக்கின் உத்தம்பூரின் மஜல்டா பகுதியில் விபத்திற்குள்ளானது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஜம்முவில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவு காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பின்னர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வரை குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7