மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தமையால் அதன்கீழ் சென்ற பலர் அதற்குள் சிக்கிக் கொண்டனர். இதனை அடுத்து பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய 36க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் மீட்புக் குழுவினர் அனுமதித்தனர். இதில் 5 பேர் பஉயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் காயமடைந்த 36 பேரில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.






