69 வயதான மேனாஃபோர்ட்க்கு வரி ஏய்ப்பு மற்றும் வங்கி மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கனவே 47 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு மேலதிகமாக 43 மத சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் அரசியல் ஆலோசகராக செயல்பட்டதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான வருமானத்தை மறைத்து, அந்த பணத்தில் பல முறைகேடான சொத்துக்கள் வாங்கி குவித்ததாக பால் மேனாஃபோர்ட்க்குட் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கும், ரஷ்யாவுக்கும் தொடர்புள்ளதா என்று எழுந்த சந்தேகம் தொடர்பாக எஃப்.பி.ஐ சிறப்பு அதிகாரி ரோபர்ட் முல்லர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த விசாரணையின் ஒரு பகுதியாக பவுல் மானஃபோர்ட்டின் வழக்கு விசாரணை கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணை முடிவில் கடந்த வாரம் பவுல் மேனாஃபோர்ட்க்கு 47 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மீதான மற்றொரு வழக்கின் தீர்ப்பு வொஷிங்டனில் இன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதியில் அவருக்கு மேலதிகமாக 43 மத சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.






