
இத்திரைப்படம் வெளியாகி 3 நாட்களிலேயே முதலீட்டை திரும்ப பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படம் இலாபத்துடன் வெற்றி நடை போடுகின்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் நேற்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இதில் R.J.பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இத்திரைப்படத்தை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கு படகுழுவினர் நன்றி தெரிவித்தனர்.
R.J.பாலாஜி தனது டுவிட்டரில், ”LKG படத்தின் மாபெரும் வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெறிறியின் நிமித்தம் கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள பத்து அரசு பாடசாலைகளை தத்தெடுத்து அந்த பாடசாலைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்
