ரொறன்ரோவின் Etobicoke பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த அழைப்பினையடுத்து மீட்கப்பட்ட குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக கனடாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





