
குறித்த சடலங்கள் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கந்தக்குட்டி நவரெட்ணம் (வயது 49) என்பவர் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பிரம்மச்சாரியான இவர் தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து அரசமணி தனுஷியன் (வயது 25) என்ற இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரும், ஆயித்தியமலைப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
