கீழ்த்தரமாக விமர்சித்த பா.ம.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளதென மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எண்ணிக்கையில் மட்டுமே வலுவான கூட்டணி அமைந்துவிடாதென கூறியுள்ளார்.
அத்தோடு, தோழமை கட்சிகளுடனான கூட்டணி தொகுதி, பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுவாக இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை பா.ம.கவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட நிலையில் பா.ஜ.கவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
                 

 



