தமிழ் திரையுலகில் தொழில் ரீதியாக போட்டிபோடும் நடிகர்கள், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருந்துவருகிறார்கள். அந்தவகையில், எம்.ஜி.ஆர்.-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய் ஆகியோரை காண்கின்றோம்.இவ்வாறு கடந்த பல ஆண்டுகளாக தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரும் நண்பர்களாக இருந்து வருவதை அவ்வப்போது இடம்பெறும் நிகழ்வுகளில் காணமுடிகின்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிம்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இக்கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்துகொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது பிறந்த நாளுக்கான கேக்கை வெட்டிய சிம்பு, தனுஷூக்கு கேக் ஊட்டி தனது நட்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.
சிம்புவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா, ஜெயம் ரவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர்.





