அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டுள்ள மேர்சிடிஸ் பென்ஸ் சுப்பர் பவுல் விளையாட்டரங்கத்தின் வௌிப்புற காட்சிகளை அமெரிக்க சுங்கத்துறை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவு முகவரக துறையினர் வௌியிட்டுள்ளனர்.கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்காக மிகப் பாரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட அதிசொகுசு உள்ளரக அரங்கம் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் கம்பீர தோற்றத்தை உலங்கு வானூர்திகள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்.
நியூ இங்கிலாந்தின் தேசபக்தர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுவதில் எதிர்பார்க்கப்படுவார்கள்.
அமெரிக்காவில் மிக எதிர்பார்க்கப்படும் காற்பந்தாட்ட விளையாட்டு போட்டியாக கருதப்படும் இந்த நிகழ்வில் நியூ இங்கிலாந்து போட்ரெய்ட்ஸ் அணியினர் லொஸ் ஏஞ்சல்ஸ் ராம்ஸிற்கு எதிராக போட்டியிடவுள்ளனர்.
இரண்டு அணிகளதும் ரசிகர்கள் அண்மையில் அட்லாண்டா மற்றும் ஜோர்ஜியா வீதிகளில் ஊர்வலமாக சென்று தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தினர்.
இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகவும் உற்சாகத்துடன் கோஷமெழுப்பி வருவதுடன், தமது அணிகள் ஒன்றுக் கொன்று பலப்பரீட்சை நடத்தி முன்னேற்றம் பெறுவார்கள் என்று நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.





