வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த டொன் வெலி பார்க்வே இன்று காலையில் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.டொன் ஆற்றில் பாய்ந்த நீர் அணைக்கட்டுகளையும் மேவி வீதியில் நுளைந்து, Bloor Streetற்கும் கார்டினர் அதிவிரைவுச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனை அடுத்து, நேற்று இரவு சுமார் 11 மணியிலிருந்து குறித்த அந்த வீதி ப் பகுதியின் இரண்டு திசைகளை நோக்கிய போக்குவரத்துகளையும் பொலிஸார் தடை செய்தனர்.
காலையில் வீதியைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு வெள்ளம் வடிந்ததை அடுத்து, காலை 5.30 அளவில் வடக்கு நோக்கிய வழித்தடங்களை திறந்துவிட்ட அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் காலை 6.30 அளவில் தெற்கு நோக்கிய வழித்தடங்களையும் திறந்து விட்டுள்ளனர்.
டொன் ஆற்றின் ஒரு பகுதியில் பாரிய பனிக்கட்டி ஒன்று நீர் ஓட்டத்தினை தடுத்தமையால் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.





