LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 5, 2019

நிராகரிக்கப்பட்ட திட்டத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார் – அண்ட்ரியா ஹார்வத் குற்றச்சாட்டு!

முற்கூட்டியே அமைச்சரவை நிராகரித்த திட்டங்களை சுகாதார அமைச்சர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என அண்ட்ரியா ஹார்வத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து குயின்ஸ் பார்க்கில் ஊடகங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த போதே, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த புதன்கிழமை சுகாதார பாதுகாப்பு சட்டம் “ஒரு வரைவு” ஒன்று கன்சர்வேடிவ் கட்சி முன்கூட்டியே தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் எப்படி மீண்டும் குறித்த திட்டத்தை அறிவிக்க முடியும் என்றும் அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து சில மணிநேரங்களுக்குள் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட், புதிய ஜனநாயகக் கட்சி இந்த திட்டங்களால் வீணாக அச்சமடைகின்றது என பதிலடி கொடுத்தார்.

அத்தோடு இரண்டு ஆவணங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7