கலிடன் பகுதியில் உள்ள வீடுடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 54 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது கலிடன் கிராமத்திற்கு அருகே மப்பிள் கிரோவ் வீதி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அறிந்து அங்கு சென்ற பீல் பிராந்திய முதலுதவியாளர்கள், சம்பவஇடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
பின்னர் அவர் கலிடன் பகுதியை சேர்ந்த ஜோசப் வெஸ்ட்காட் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய முதலுதவியாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த வைப்பு சம்பவத்தினால் அருகில் உள்ள 10 முதல் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து ஏற்பட்டதை அடுத்து சுற்றியுள்ள பகுதிகளை தீயணைப்பு படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 30 முதல் 35 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





