LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை மீட்டு, சிறந்ததோர் சமூகத்தையும், சட்டத்தை மதிக்கின்ற நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒருபோதும் பின்னடையக்கூடாது.

அவ்வாறு இல்லாதபோது நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியாக நாம் ஒரு மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.  அத்துடன் தேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக்கூடாது.

கிராமிய வறுமையை ஒழிக்கும் முக்கிய இயக்கமான கிராமசக்தி மக்கள் இயக்கம் இன்று வெற்றிகரமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தி செயன்முறைகளின் மூலம் வறுமையை ஒழித்து சுயமாக எழுந்திருக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் விசேட அம்சமாகும்.

இவ்வருடம் இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காக இம்மாதம் 18ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிராமசக்தி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7