LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

விவசாயிகளுக்கான உதவிதொகை வழங்குவதன் அவசியத்தை உணர வேண்டும் – பியூஸ் கோயல்

விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சிப்பதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின்  இடைக்கால வரவுசெலவு திட்டம்  நேற்று ( திங்கட்கிழமை) மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டு, குரல் மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

“விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

கடந்த அரசின் நடைமுறைகளை மாற்றி நேர்மையாகச் செயற்படும் ஒரு அமைப்பை நோக்கி முன்னேறி வருகின்றோம். போலியான நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளையில், நியாயமான நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படும்” என அவர் உறுதியளித்துள்ளார்

இதேவேளை குறித்த விவாதத்தின் போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7